மேலும்

போட்டிக்களத்தில் நான்கு முஸ்லிம்கள், இரண்டு தமிழர்கள்

வரும் நொவம்பர் மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடுவதற்கு, இரண்டு தமிழ் வேட்பாளர்களும், நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று, சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சார்பில் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

அதேவேளை, எமது தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக, சுப்ரமணியம் குணரத்தினம் என்பவருக்கும் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த தேர்தலில் இரண்டு  தமிழர்கள் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, இன்று இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் சார்பிலும் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம். ஹஸ்புல்லா மற்றும், அகமட் ஹசன் முகமட் அலவி ஆகிய இருவரின் சார்பிலேயே இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலியாஸ் இத்ரூஸ் முகமட் ஆகியோர் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் 4 முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *