மேலும்

மாதம்: September 2019

‘மொட்டு’ க்கு செக் வைக்கும் ‘கை’ – கோத்தாவை ஆதரிக்க நிபந்தனை 

மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், கை அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட்டாலேயே அவருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

வெளிநாடுகளிடமுள்ள பொருளாதார கேந்திரங்களை மீட்போம் – கோத்தா

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிறிலங்காவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘உத்தர தேவி’ நூல்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘உத்தர தேவி’ என்ற நூல், நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

ஹேமசிறி, பூஜித மீது கொலைக் குற்றச்சாட்டுகள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலைச் சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

‘வேட்பாளர் நானே எனக் கூறவில்லை’ – ரணில் மறுப்பு

அதிபர் தேர்தலில் தானே போட்டியிடப் போவதாக நேற்றைய கூட்டத்தில் தாம் கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

பங்காளிக் கட்சிகள் பதைபதைப்பு – இன்று ரணிலுடன் முக்கிய சந்திப்பு

அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளால், அதன் பங்காளிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்தநிலையில் இன்று பங்களாகிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளன.

ரணில் – சஜித் தனியாகச் சந்தித்துப் பேச முடிவு

அதிபர் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதி  தலைவர் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

12 கட்சிகள், 2 சுயேட்சைகள் அதிபர் தேர்தலில் போட்டி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 12 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் நானே போட்டியிடுவேன் – ரணில் அறிவிப்பு

அடுத்த அதிபர் தேர்தலில் தாமே போட்டியிடுவதற்கு விரும்புவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர நேற்று மாலை காலமானார்.