மேலும்

கோத்தாவின் சுய வரலாற்று நூல் வெளியீடு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

இந்த நூலை சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே, போர் மற்றும் அதனைச் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய நந்திக்கடலுக்கான பாதை, கடொல் எத்து, உத்தர தேவி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

‘கோத்தாபய’ என்று பெயரிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலின் முதல் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம், மேஜர் ஜெனரல் கமல் கருணாரத்ன வழங்கினார்.

இங்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் கருணாரத்ன, கோத்தாபய ராஜபக்ச போருக்குப் பயந்து இராணுவத்தை விட்டு ஓடியவர் என்பதே அவரை எதிர்ப்பவர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருப்பதாகவும், ஆனால் அவர் முன்னுதாரணம் கொண்ட ஒரு தொழில்சார் இராணுவவீரர் என்று குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் கோத்தாபய ராஜபக்ச வழிநடத்திய பற்றாலியனும் இன்னொரு பற்றாலியனும் முன்னேறிக் கொண்டிருந்த போது, மற்ற பற்றாலியனை முந்திக் கொண்டு சென்ற கோத்தாபய ராஜபக்சவின் பற்றாலியனை பின்னுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டதாகவும், அதனால் அன்றைய சண்டையில் 90 வரையான படையினரை இழக்க நேரிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திரும்பிய கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக, இருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது எல்லாவற்றையும் சரியான இடத்தில் நிறுத்தி நாட்டைப் பாதுகாத்தார் என்றும் அவர் கூறினார்.

அமைதிப் பேச்சு காலத்தில் சிறிலங்கா இராணுவம் உலகின் மிக அவமானகரமான ஒன்றாக இருந்தது.இராணுவம் அதிகபட்ச சகிப்புத்தன்மையை கொண்டிருந்தது. அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்சவே, விமானப்படை போதுமான போர் விமானங்களைக் கொண்டிருப்பதையும், அனைத்து படைகளுக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறன் இருப்பதையும் உறுதி செய்தார். கோத்தாபய ராஜபக்ச ஒரு முன்மாதிரியான தொழில்முறை இராணுவ மனிதர்”என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *