மேலும்

எக்னெலிகொட படுகொலை- 9 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த சூழ்ச்சி தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

2015 ஜனவரி 25ஆம் நாளுக்கும், 27ஆம் நாளுக்கும் இடையில் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

இந்தப் படுகொலை தொடர்பாக, விசாரிக்க ஹோமகம மேல்நீதிமன்றத்தில்,  மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை (ட்ரயல் அட் பார்)  நியமிக்குமாறு, தலைமை நீதியரசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

இந்தப் படுகொலையில் தொடர்புடையவர்கள் என, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளான, லெப்.கேணல் சம்மி அர்ஜூன் குமாரத்ன, ராஜபக்ச எனப்படும் நாதன், பிரியந்த டிலஞ்சன் உபசேன எனப்படும் சுரேஸ், செனிவிரத்ன முதியான்சலாகே ரவீந்திர ரூபசேன எனப்படும் றஞ்சி, யாப்பா முதியான்சலாகே சமிந்த குமார அபேரத்ன,  செனிவிரத்ன முதியான்சலாகே கனிஷ்க குணரத்ன, அய்யாசாமி பாலசுப்ரமணியம், தங்கஹ கமராலகே தரங்க பிரசாத் கமகே,  பீரிஸ் ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *