சிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு, சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வாழ்த்து தெரிவித்து, கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்து இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே, “உறவுகளைப் பலப்படுத்துவதற்கு எனது ஆதரவையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.