கொழும்பு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கம் – ஒரே குடைக்குள் முப்படைகள், காவல்துறை
சிறிலங்கா அரசாங்கம் கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் என்ற புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவ, கடற்படை, விமானப்படை, மற்றும் காவல்துறை பிரதேசங்களும், உடனடியாக ,இந்த கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.