மேலும்

நாள்: 5th April 2019

இழப்பீட்டு பணியக ஆணையாளர்கள் நியமனம் – கேணல் ரத்னபிரிய பந்துவும் ஒருவர்

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவிடம் இதுவரை 25 மணி நேரம் விசாரணை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நேற்று நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

சிறிலங்கா படைகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்படவில்லை- சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

பாதுகாப்புப் படைகளை தரமுயர்த்துவது மற்றும் பலப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட, நொதேர்ன் பவர் நிறுவனத்தை, 20 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வாக்கெடுப்பில் இருந்து நழுவும் சுதந்திரக் கட்சி அணி

வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.