மேலும்

நாள்: 23rd April 2019

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது

கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில்,  இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் அமெரிக்க அதிபர் பேச்சு – உதவுவதாக வாக்குறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

முக்கிய அரசியல்வாதியினால் விடுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி

தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவர், ஏற்கனவே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயர்மட்ட அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டவர் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் கபீர் ஹாசிம்.

10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.