மேலும்

நாள்: 2nd April 2019

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கைதிகளே இல்லை – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று மறுத்துள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 54 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் மீது விரைவில் விசாரணைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார் – மங்கள

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு இல்லை – மாவை

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தால் தான் கூட்டணி – ‘கை’யை மிரட்டுகிறது ‘மொட்டு’

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தால் தான், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுக்களைத் தொடர முடியும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் 4 நைஜீரியர்கள் கைது

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.