மேலும்

நாள்: 1st April 2019

ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவும் – பிரதி தூதுவர்

சிறிலங்காவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா

சிறிலங்காவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு நிரந்தரமான தளம் எதையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு கிடையாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளை ஓரம்கட்ட முனையும் வேளை முக்கியமான திருப்பம் – அட்மிரல் கரன்னகொட

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், சிறிலங்கா படையினருடன் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.

விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழி கார்பன் ஆய்வு அறிக்கையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.