மேலும்

மாதம்: February 2019

நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது சிறிலங்கா – நவநீதம்பிள்ளை

சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் அரச சார்பற்ற நிறுவனங்கள்

மனித உரிமைகள் விவகாரங்களில், ஐ.நா மனித உரிமைகள்  பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் மீது, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – பசில் ராஜபக்ச

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பசில் – கம்மன்பில இடையே வெடித்த மோதல் – விலக்குப் பிடித்தார் மகிந்த

கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கும், உதய கம்மன்பிலவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டு முடக்கம் – எந்த நேரத்திலும் கைதாவார்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் சமந்தா பவர்

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய – சிறிலங்கா விமானப்படைத் தளபதிகள் சந்திப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்- பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து, சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்தும், அவர் சிறிலங்காவுக்குப் புறப்பட்ட விடயத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும், பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சிஐடி விசாரணையை நிறுத்தக் கோரிய மகிந்த – நிராகரித்தார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.