மேலும்

மாதம்: February 2019

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கு – விக்னேஸ்வரனுக்குப் பின்னடைவு

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம் – அமெரிக்கத் தளபதி

சிறிலங்காவில் அரசியல் கொந்தளிப்பு இருந்த போதிலும், சிறிலங்கா படைகளுடன் ஒத்துழைப்பையும், கூட்டையும் தொடர்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடன் சந்திரிகா சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அனுமதி கோருகிறார் ரணில்

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

முல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று  சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார்.

கரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியும் சீனாவிடம்

கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.நாவின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில் – ஜெனிவா அறிக்கைக்கு முன்னோடி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.