மேலும்

நாள்: 25th June 2018

இரண்டு மாதங்களில் அமெரிக்க குடியுரிமையை துறக்க முடியும் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனை இரண்டு மாதங்களில் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

பதவியால் தப்பிக்கும் அட்மிரல் விஜேகுணரத்ன – விரைவில் கைதாவார்?

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திரிசங்கு நிலையில் 16 பேர் அணி – கூட்டு எதிரணியும் விரட்டுகிறது

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை தம்முடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி

சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது.

சிறிலங்கா முப்படையினரை குடும்பத்துடன் கயாவுக்கு அழைத்துச் சென்ற இந்திய விமானப்படை விமானம்

சிறிலங்காவின் முப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  160 பேர் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், நேற்று புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

“கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள், விரும்புகிறார்கள் என்ற போதும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.