மேலும்

நாள்: 2nd June 2018

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி?

கொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார்.

அதிபர் வேட்பாளராக பீரிஸ்? – ராஜபக்சக்களின் குடும்ப மோதலால் முடிவு

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.

17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள சிறிலங்கா

கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, சிறிலங்கா 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக, வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோருக்கான பணியகம் ஏ.எச்.எம்.பௌசியிடம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோத்தாவின் வழக்கை விசாரிப்பதில் இருந்து 4 நீதியரசர்கள் விலகினர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்கும்  குழுவில் இருந்து இதுவரை நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர்.