மேலும்

நாள்: 12th June 2018

கோத்தாவுக்கு அமெரிக்க குடியுரிமை தடை இல்லை – கம்மன்பில

அடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு  அமெரிக்கக் குடியுரிமை ஒரு தடையாக இருக்காது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம்

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர்.

அமெரிக்க குடியுரிமையை விலக்க கோத்தாவை அனுமதியாது அமெரிக்கா

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.

மைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ்

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விடைபெறும் அமெரிக்க தூதுவருக்கு விருந்தளித்தார் சிறிலங்கா அதிபர்

கொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

இணைத்தள ஆசிரியரை நாடு கடத்துமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லையாம்

லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை அதிபரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

கோத்தாவை நிறுத்தக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

ஐதேகவினர் ஆறு பேருக்கு இன்று பிரதி அமைச்சர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.