மேலும்

நாள்: 8th June 2018

ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி  கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின்  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் கடத்தல் – விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வடக்கில் 9 ஆண்டுகளில் முளைத்த 131 பௌத்த விகாரைகள்

வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சி

வரலாற்றில் முதல் முறையாக – அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி, மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மகிந்தவின் ஆசியின்றி மைத்திரியால் மீண்டும் போட்டியிட முடியாது – டிலான்

மகிந்த ராஜபக்சவின் ஆசியின்றி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, சிறிலங்கா சுத்தந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.