மேலும்

நாள்: 13th June 2018

கோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயுதக் களைவு குறித்த ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

ஆயுதக்களைவு பிரகடனம் தொடர்பான, ஜெனிவாவுக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  நொபுஷிகே தகாமிசாவா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை – என்கிறார் பீரிஸ்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

கோத்தா அதிபரானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் – மேர்வின் சில்வா

2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபரானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.