மேலும்

நாள்: 14th June 2018

மஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு?

இந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்படுவார்

சண்டே லீடர்  ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளார்.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, அதிபர் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுத்துள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.