மேலும்

நாள்: 11th June 2018

தவறான பாதையில் செல்கிறார் கோத்தா – தயான் ஜயதிலக

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று, முன்னாள் இராஜதந்திரியும்,  அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

கோத்தாவைக் கவனத்தில் எடுப்பேன் என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கால் வைத்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள்

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஆயுதப் போராட்டம் பலமடைய 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய

ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கோத்தாவைச் சந்திக்கிறது 16 பேர் அணி

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி  வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

64.8 பில்லியன் ரூபாவுக்கு உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படை 64.8 பில்லியன் ரூபாவுக்கு, பல்வேறு வகையான உலங்குவானூர்திகளையும், ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.