மேலும்

நாள்: 20th June 2018

ஞானசார தேரர் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் – சலுகைகள் மறுப்பு

ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகத் தான் நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியின் நியூயோர்க் பயணத்துக்கு 120 மில்லியன் ரூபா செலவு

2016ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பங்கேற்றதற்காக, 120 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள்

தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிப்பு

போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது.

2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர்  ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாளை முடிவு?

மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் நாளை முடிவு செய்வார்கள் என சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்தார்.