மேலும்

நாள்: 7th June 2018

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசியாவின் மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீன நிறுவனம்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது.  இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கக்கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு  பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளனர்.

பட்டியல் எதுவும் இல்லை – சாலிய பீரிஸ் குத்துக்கரணம்

எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவிடம் விரைவில் விசாரணை

‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின்  இணை ஆசிரியர் கீத் நொயார்  கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.