மேலும்

நாள்: 4th June 2018

தேவைப்பட்டால் மாத்திரம் ஊடக மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் பங்கேற்பார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளர், தேவைப்பட்டால் மாத்திரமே பங்கேற்பார் என்று,  சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

“சிறிலங்கா அதிபர் மகிந்த” – சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர் தடுமாற்றம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர், ஊடகவியலாளர்களுடனான தனது முதலாவது சந்திப்பின் போது, வாய் தடுமாறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக?

முன்னாள் இராஜதந்திரியான, கலாநிதி தயான் ஜயதிலகவை, ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்

அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க ஆர்வம்

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவரான மக் தோன்பெரி தெரிவித்துள்ளார்.

ஊடக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்குத் தடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை நேற்று அறிவித்துள்ளது.

நாளை பிரதி சபாநாயகர் தெரிவு- சுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி

பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.