மேலும்

மாதம்: May 2018

கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு

சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா

சிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு எதிராக துப்பாக்கிகளுக்குப் பதிலாக இப்போது வாள்கள்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரும், ஊடகப் பணியாளருமான ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து நேற்று யாழ். நகரில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

‘நாடு பின் நோக்கிச் செல்ல நேரிடும்’ – அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் எச்சரித்த சம்பந்தன்

சிங்கள தலைவர்கள்  சிலர் கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் நாடு மீண்டும் பின் நோக்கி செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, உலக அமைதிக்கு முக்கியம் – அமெரிக்க காங்கிரஸ் குழு

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு சிறிலங்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு முக்கியமானது என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிக் குழு தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்?

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படைச் சிப்பாய் துப்பாக்கியுடன் மாயம்

சீனக்குடா விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.