மேலும்

நாள்: 24th June 2018

விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, “நீதியரசர் பேசுகிறார்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

கோத்தா பற்றி அமெரிக்க தூதுவர் பேசவில்லை- என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.

வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு

வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை

வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

தயான் ஜயதிலகவின் நியமனத்துக்கு 100இற்கு மேற்பட்ட சிவில் சமூகத்தினர் எதிர்ப்பு

ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்குப் பெயரிடப்பட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு, 100இற்கும் மேற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.