மேலும்

நாள்: 21st June 2018

சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித்.

அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில்  அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்

போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்.

வடக்கில் வீதி புனரமைப்பு குறித்து ஆராய வருகிறது இந்திய நிபுணர் குழு

வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் சிறிலங்கா வரவுள்ளது.

ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான கடைசி கொடுப்பனவை வழங்கியது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே நேற்று வொசிங்டனில்  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.