மேலும்

நாள்: 17th June 2018

மல்லாகத்தில் குழு மோதல் – சிறிலங்கா காவல்துறை சுட்டதில் ஒருவர் பலி

மல்லாகம் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த மோதலை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிபுணர்களுடன் சிறிலங்கா வந்துள்ள இராட்சத விமானம்

அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு  வந்துள்ளது.

மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடக்காது – பைசர் முஸ்தபா

ஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை, என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு – சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றாராம் சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வலியுறுத்தலுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா விமானப்படைக்கு இத்தாலிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முயற்சி?

இத்தாலியிடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சி மற்றும் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆய்வு செய்துள்ளார்.