மேலும்

நாள்: 18th June 2018

கொழும்புக்கு முதல் முறையாக பெண் கட்டளை அதிகாரியுடன் வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்

பிரெஞ்சுக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு நாள் பயணமாக மாத்திரம் கொழும்பு வந்துள்ள இந்தப் போர்க்கப்பல்கள் இன்று மாலை புறப்பட்டுச் செல்லவுள்ளன.

சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

மயிலிட்டியில் பற்றியெரியும் கப்பல் – அணைக்க முடியாமல் திணறும் சிறிலங்கா கடற்படை

காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்

புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு 4 மணி நேரம் முன்னரே வருமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்தில் நேற்றிரவு பதற்றம் – பொதுமக்கள் கொந்தளிப்பு

மல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.