மேலும்

மாதம்: October 2017

2018 வரவுசெலவுத் திட்டத்தில் 1,813 பில்லியன் ரூபா பற்றாக்குறை – இன்று நிதி ஒதுக்கீட்டு பிரேரணை

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாள் அல்லது அதனை அண்டிய ஒரு நாளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் திருப்பதியில் தரிசனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’க்குப் பதில் ‘ஐக்கிய’ இடம்பெற வேண்டும் – விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’  என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’  என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம்

அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம் சிறிலங்காவில் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேரவாத இராசதந்திரம் வளர்கிறது

இங்கிலாந்து ஒக்ஸ்போட் கல்லூரியில் படித்து நோபல் பரிசு பெற்றவர்களது உருவப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பது வழக்கம்.  அவ்வாறு வைக்கப்பட்ட படங்களில் இருந்து அந்த கல்லூரியின் பழைய மாணவி பர்மிய அரசியல் தலைவர் ஓன் சான் சூகி அவர்களின் உருவப்படத்தை நீக்கி களஞ்சியத்தினுள் வைத்து விட்டது அந்த கல்லூரி நிர்வாகம்.

உலகறிந்த நல்லாசான் நற்பணி தொடர வாழ்த்துகின்றோம்

ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம்.   ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர். 

இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

மட்டு. மாவட்ட அரச அதிபர் நியமனத்தில் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசு இடையே இழுபறி

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.