மேலும்

மாதம்: October 2017

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்க முயற்சி – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

போர்க்குற்றங்கள் தொடர்பாக வன்னி களமனையில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைப் பொறுப்புக்கூற வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார்.

அமெரி்க்காவின் பசுபிக் கப்பல்படைத் தளபதி சிறிலங்காவில்

அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் சுவிவ்ற் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம்- மகாநாயக்கரை கோருகிறார் கம்மன்பில

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

தாய்வான் வங்கி மோசடி – மைத்திரி போட்டியிட்ட அன்னத்தின் உரிமையாளர் கைது

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும், புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சாலிலா முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

‘காலி கலந்துரையாடல்-2017’ கொழும்பில் தொடங்கியது

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’ இன்று  கொழும்பில் உள்ள கோல்பேஸ் விடுதியில் ஆரம்பமானது.

வடகொரியாவுடனான அனைத்து தொடர்புகளுக்கும் சிறிலங்கா தடை

வடகொரியாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து, சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.

அணு, இரசாயன, உயிரியல் ஆயுதங்களுக்கு சிறிலங்காவில் தடை

அணு, இரசாயன, மற்றும் உயிரியல் ஆயுதங்களை சிறிலங்காவில் தடை செய்யும், சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.