மேலும்

நேற்றுமாலை கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் நிமிட்ஸ்

Nimitz Carrier Strike Group (1)அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

11 ஆவது விமானந்தாங்கி தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கும், யுஎஸ்எஸ் நிமிட்ஸ், அதன் துணைப் போர்க்கப்பல்களான நாசகாரிகளுடன் இணைந்து, நேற்று கொழும்பு வந்தது.

அதிவேக ஏவுகணை போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிரின்சிரோன், நாசகாரிக் கப்பல்களான, யுஎஸ்எஸ் ஹவார்ட், யுஎஸ்எஸ் சூப், யுஎஸ்எஸ் பின்க்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியனவும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

Nimitz Carrier Strike Group (1)

Nimitz Carrier Strike Group (2)

Nimitz Carrier Strike Group (3)

Nimitz Carrier Strike Group (4)

Nimitz Carrier Strike Group (5)

இந்தப் போர்க்கப்பல்கள் எதிர்வரும் 31ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது.

இதன்போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க கடற்படையினர் பல்வேறு சமூக நலன்புரி வேலைத் திட்டங்களிலும் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *