மேலும்

சீனாவுடன் இணைந்து செயற்படும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அமெரிக்கப் படைத் தளபதி

Rear Admiral Donald D. Gabrielsonசீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன்.

பிராந்தியத்தில் – குறிப்பாக சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தை பற்றி அமெரிக்கா கவலை கொண்டுள்ளதா என்று சிறிலங்கா வந்துள்ள றியர் அட்மிரல் மொனால்ட் டி கப்ரியேல்சனிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், “ சில விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாததால், சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சீனா தற்போது நன்மைகளை பெற்றுக் கொண்டிருக்கும் அமைப்பு முறையை மறுசீரமைக்க முயல்கிறது. இது கவலையளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *