மேலும்

மைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம்- மகாநாயக்கரை கோருகிறார் கம்மன்பில

udaya gammanpilaபுதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில  புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்தின் நிலை தொடர்பாக சிறிலங்கா அதிபரும், பிரதமரும் வழங்கியுள்ள உத்தரவாதம் குறித்து மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் தெரிவித்துள்ள கருத்து தமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

‘சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை அகற்றுவதற்குமான அரசியல் நிகழ்ச்சி நிரலை மல்லத்த பீடத்தின் மகாநாயக்க மனதில் கொள்ள வேண்டும்.

இனரீதியாக நாட்டைப் பிரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை மகாநாயக்கர் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *