மேலும்

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்

npcவடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 8ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேரும், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி.தவராசா, அ.பரஞ்சோதி, இ.ஆர்னோல்ட், க.சிவநேசன், சு.பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், க.தா.லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், ஆகியோரே புதுடெல்லி செல்லவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *