மேலும்

சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு

vijayakalaபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில், 9 ஆவது எதிரியான சுவிஸ் குமாரைப் பொதுமக்கள் கட்டி வைத்திருந்த போது அங்கு சென்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவரை அவிழ்த்து விடுமாறு கூறி, காவல்துறையினரின் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காமல் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதனை 9 ஆவது எதிரியே சாட்சியம் அளித்துள்ளார்.

அத்துடன், அவிழ்த்து விடப்பட்ட பின்னர், சுவிஸ் குமாரை அவரது உறவினர்கள் அழைத்துச் செல்லும் வரை- நள்ளிரவு 11 மணி தொடக்கம் 1 மணிவரை இரண்டு மணிநேரம் அவருக்காக வீதியில் காத்திருந்துள்ளார்.

இது சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைக்கும் முதல் நடவடிக்கை என்றும், யாழ். காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிறீகஜன் அவரைத் தப்பிக்க வைக்க மேற்கொண்டது இரண்டாவது நடவடிக்கை என்றும் நீதிபதி இளஞ்செயழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *