மேலும்

ஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

field-marshan-sarath-fonseka (1)ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் சேர்க்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

இந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்டுள்ளார். களனியவில் நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,

“நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், சிறிலங்கா அதிபரின் குழுவில், எனது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், எனது பயணத்துக்கு அமெரிக்காவினால் நுழைவிசைவு வழங்கப்படவில்லை.

தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதன் மூலம், இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும்.

போர் என்ற போர்வைக்குள் இருந்து தவறுகளில் ஈடுபட்டவர்களால், போர் குற்றச்சாட்டுகளுக்கு நானும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

பீல்ட் மார்ஷல் சரத்  பொன்சேகா தனது மகள்களை பார்ப்பதற்காக அமெரிக்கா செல்வதற்கு, ஏற்கனவே ஒருமுறை விண்ணப்பித்திருந்த போது, அவருக்கு நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *