மேலும்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியுடன் பசுபிக் விமானப்படையின் உதவித் தளபதி சந்திப்பு

Major General James Eifert-SLAFஅமெரிக்காவின் பசுபிக் விமானப்படையின் உதவி தளபதி மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபேர்ட் சிறிலங்கா விமானப்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்காவின் பசிபிக் விமானப்படையின் உதவித் தளபதி, மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபேர்ட் நேற்று சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு அவர் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதியைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Major General James Eifert-SLAF

இந்தச் சந்திப்பில், சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் ஹெஸ், பசுபிக் விமானப்படையின் சிறிலங்காவுக்கான  பணிப்பாளர் மேஜர் மார்க் லீசர் ஆகியோரும், கலந்து கொண்டனர்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *