சிறிலங்காவில் இருந்து புறப்பட்டார் ராஜ்நாத் சிங்
சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறியதால், இரண்டு மனுதாரர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் ஒன்பதாவது தளபதியான எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் நினைவுக் குறிப்புகளான- ‘ஒரே தேசமாக, ஒரே மக்களாக நிலைத்திருத்தல்’ (To Survive as One Nation, One People) என்ற நூல், கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்குவதற்கு, பாகிஸ்தான் முன்வந்த போது, சிறிலங்கா விமானப்படை அதனை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.
அமெரிக்க கடற்படையினால் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்ட, பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது.