மேலும்

எரிபொருள் விநியோகத்தை கையில் எடுத்தது சிறிலங்கா இராணுவம்

fuel-suply-sla (1)சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எரிபொருள் விநியோகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் செய்யும், சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, நள்ளிரவிலேயே, கொலன்னாவ, முத்துராஜவெல எண்ணெய்,  களஞ்சியங்களை சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றி வளைத்து, தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அதேவேளை, பெற்றோலியக் கூட்டுத் தாபனப் பணியாளர்கள் வேலைக்குத் திரும்பாவிடின் வேலையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

fuel-suply-sla (1)

fuel-suply-sla (2)

fuel-suply-sla (3)

இந்த நிலையில், கொலன்னாவ, முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியங்களில் இருந்து எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள சிறிலங்கா இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்த போது, பெற்றோலியக் கூட்டுத் தாபய பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், இன்று பிற்பகல் 15 எரிபொருள் தாங்கிகள் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கொலன்னாவ களஞ்சியத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.

அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எரிபொருளை விநியோகிக்கும் தொடருந்தை, உறுகொடவத்தையில், பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தடுத்து வைத்துள்ளனர்.

இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *