பிரெஞ்சு கடற்படையின் உயர் மட்டத் தளபதி சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு
பிரெஞ்சு கடற்படையின் கடல்சார்படையின் பிரதித் தளபதி றியர் அட்மிரல் ஒலிவர் லாபாஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.



