விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று நல்லை ஆதீன குரு முதல்வரும், யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விசாரணைக்குழுவினால் குற்றம்சுமத்தப்படாத இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது.
சிறிலங்காவில் எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் விகாரை ஒன்றையும், சிறிலங்கா கலாசார நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும், தேவையான காணிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நேற்று மாலை வரையில் சாதகமான எந்த பதிலும், முதலமைச்சரிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.