மேலும்

மாதம்: June 2017

சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்தப் பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையினர்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் லேக் எரி கப்பலில், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமாறும் உலகில்: தமிழர்கள் – லோகன் பரமசாமி

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்று வரும் குண்டு தாக்குதல்கள். பொதுமக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருவதாக பொதுசன விவாதங்கள் எடுத்து காட்டுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வந்தவர்களுக்கு புகலிடம் கொடுத்தோம், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது ஒரு விவாதம்.

மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவுகளால் இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கப்படாது – சிறிலங்கா தூதுவர்

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளால் இந்தியாவுடனான உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘தி ஸ்டேட்மன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா தூதரகங்களில் மீண்டும் அரசியல் நியமனங்கள் அதிகரிப்பு- மீறப்படும் வாக்குறுதி

துறைசார் இராஜதந்திரிகள் அல்லாதோரை வெளிநாடுகளில் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளாக நியமிக்கப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமெரிக்க பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிசை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொகமட் சகாவுல்லா சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமான நிலையத்தில் வரவேற்றார்.