மேலும்

திருகோணமலையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி

pak-navy-chief-raviபாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொகமட் சகாவுல்லா சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமான நிலையத்தில் வரவேற்றார்.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன், அவரது முதன்மை செயலர் கொமடோர்  ஜவாய்ட் இக்பால், பாகிஸ்தான் கடற்படை பயிற்சி அகடமியின் தளபதி கொமடோர் அட்னான் அகமட், ஆகியோரும் சிறிலங்கா வந்துள்ளனர்.

திருகோணமலை கடற்படை பயிற்சி அகடமியில் இன்று நடைபெறும், பயிற்சியை முடித்து வெளியேறும் கடற்படையினரின் அணிவகுப்பு நிகழ்வில், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

pak-navy-chief-ravi

அத்துடன் கடற்படை பயிற்சி அகடமியின், பயணக் கழகத்தையும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி திறந்து வைக்கவுள்ளார்.

1986ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் ஈச்சந்தீவில் புலிகளின் மறைவிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான, கொமாண்டர் சாந்தி குமார் பகாரின் நினைவாக இந்த பயணக் கழகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *