மேலும்

பளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு? – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல்

palai-shooting (1)பளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பளை- கச்சார் வெளிப் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினரின் வாகனம் மீதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியே சூடு நடத்தப்பட்டதாகவும், வீதியோரப் பற்றைக்குள் இருந்து ஒருவர் துப்பாக்கியுடன் தப்பிச் செல்வதை காவல்துறையினர் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டன.

palai-shooting (1)palai-shooting (2)

அந்தப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கோரப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

முகமாலை தொடக்கம் கச்சார் வெளி வரையான 3 கி.மீ பகுதி மற்றும் முகமாலை தொடக்கம் கிளாலி வரையான 3 கி.மீ பகுதியை உள்ளடக்கிய சுமார் 9 சதுர கி.மீ பரப்பளவு பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாகவும் சிறிலங்கா காவல்துறையினரை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *