மேலும்

நாள்: 3rd April 2017

போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, போர்க்குற்ற விசாரணை எதற்கு? – ராஜித சேனாரத்ன கேள்வி

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் நாளை கொழும்பு வருகிறார்

அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாணசபையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பணியகத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் போல் கொட்பிரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்கச் செயற்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு தடை

ஐ.நாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்களைக் குழப்பும் உத்தரவு ஒன்று சிறிலங்கா பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.

இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது – ரணில்

13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா

இந்தியாவுடன் பொருளாதாரத் திட்டங்கள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா இந்த ஆண்டில் கையெழுத்திடவுள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு

தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

சீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 3000 மெட்றிக் தொன் அரிசியுடன் 3 கப்பல்களை அனுப்பியது பாகிஸ்தான்

வரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன. சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.