மேலும்

கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு

defence-ministry-meetingதீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

நேபாளத்தின் தெற்காசிய கற்கைகள் நிலையம் மற்றும் ஜேர்மனியின் Konrad Adenauer Stiftung ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான கற்கைகள் நிறுவகம், இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளது.

இந்தக் கருத்தரங்கில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளல் மற்றும் தோற்கடித்தல் தொடர்பான கலந்துரையாடுவதற்காக இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்பு கற்கைககள் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *