மேலும்

நாள்: 24th April 2017

சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது – கிளிநொச்சியில் பேரணி

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறும் நிலையில், கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பண்ணைக் காணிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

எட்கா உடன்பாடு குறித்த நான்காவது கட்டப் பேச்சுக்கள் புதுடெல்லியில் ஆரம்பம்

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இந்திய – சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.

நீல நிறத்துக்கு மாறுகிறது சிறிலங்கா காவல்துறை சீருடை

சிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம் – ரணில்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாக, இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை

அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை.

இந்தியாவுடனான உடன்பாட்டுக்கு எதிர்ப்பு – தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்காவின் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியரை் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.