மேலும்

நாள்: 27th April 2017

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு நடத்த இணக்கம்

தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?

முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பந்தனுடன் பிரித்தானியத் தூதுவர் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சோனியா, மன்மோகன், ராஜ்நாத் சிங்குடன் ரணில் பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா பிரதமர் தங்கியிருந்த புதுடெல்லி தாஜ் பலஸ் விடுதியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

‘அனுமன் பாலம்’ குறித்து சிறிலங்கா பிரதமருடன் நிதின் கட்கரி பேச்சு

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு நடத்தியுள்ளார்.