மேலும்

நாள்: 1st April 2017

அமைச்சுக்கள் தொடர்பில் இணக்கமில்லை – அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைப்பு

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறிகள் காணப்படுவதால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்

தெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு  விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ சிறிலங்கா அரசு இடமளியாது – மகிந்த சமரசிங்க

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

காசு கொடுத்த பின் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணக்கம்

ஐந்து மில்லியன் ரூபாவைக் கொடுத்த பின்னர், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் சிறிலங்கா படையினர் வசமுள்ள 468 ஏக்கர் காணிகளை விடுவிக்க, பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.