மேலும்

நாள்: 25th April 2017

எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி நீரில் மூழ்கிப் பலி

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

விவசாயப் பண்ணைக் காணிகளை விடுவிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயப் பண்ணைக் காணிகளை சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து, வடக்கு மாகாணசபையிடம் கையளிப்பதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம்

மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார்.

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்

மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.