முன்னாள் படைத் தளபதிகள் மூவரிடம் விசாரணை
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி உள்ளிட்ட மூன்று ஓய்வு பெற்ற படை உயர் அதிகாரிகளிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி உள்ளிட்ட மூன்று ஓய்வு பெற்ற படை உயர் அதிகாரிகளிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த ஏற்படுத்திய அனர்த்தத்தை அடுத்து, தனது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பவுள்ளார்.
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை குப்பைமேடு சரிந்து விழுந்ததில் மரணமானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டால், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.